அமாவாசையில் 100 அடி உள்வாங்கி திருச்செந்தூர் கடல்; பாறை மீது ஏறி செல்பி எடுத்த பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2026 11:08
திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் அமாவாசை முன்னிட்டு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.
அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் இந்த கடல் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோவில் கடலானது அம்மாவாசை பௌர்ணமி ஆகிய நாட்களில் காலையில் சுமார் 3 மணி நேரம் உள்வாங்கி காணப்படுவதும் பின்னர் இயல்புநிலை திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அம்மாவாசை தினம் என்பதால் கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கியது ஆச்சரியத்துடன் பார்த்து பாறை மீது ஏறி நின்று செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.