பாலவநத்தம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2026 11:08
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா நடந்தது.
கோயிலில் ஜூலை 31 ல் கொடியேற்றம், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அம்மன் விழா நாட்களில் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரு விளக்கு பூஜைகள் நடந்தது இச்சா,கிரியா, ஞான சக்தி, பராக்சக்தி மாரியம்மனுக்கு பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். முளைப்பாரி கரைத்தல் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.