Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்த பிருந்தாவன் அமைப்பு ராதா ... மதுரை வைகையில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட பக்தர்கள்; வீசிச் சென்ற குப்பைகளால் மாசுபடும் ஆறு மதுரை வைகையில் தர்ப்பணம் கொடுத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கட்டுமானம் கோர்ட் உத்தரவுபடி தொல்லியல் துறையினர் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கட்டுமானம் கோர்ட் உத்தரவுபடி தொல்லியல் துறையினர் ஆய்வு

பதிவு செய்த நாள்

12 ஆக
2026
12:08

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், புதிய கட்டுமானங்கள் குறித்து, சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, தொல்லியல் துறையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

உலக புகழ்பெற்ற புராதான கோவிலான, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அனுமதியின்றி பொது தீட்சிதர்கள், 10 ஆயிரம் சதுர அடியில் மண்டபம் கட்டியது, பரதநாட்டிய அரங்கை கோ சாலையாக மாற்றியது மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என, சிதம்பரத்தை சேர்ந்த தெய்வீக பக்தர்கள் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், கடந்தாண்டு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர்கள் குழு ஒப்புதல் பெறாமல் கோபுரங்களை சுற்றி பூங்கா அமைப்பதை எதிர்த்தும், அனுமதி பெறாமல் கோவிலுக்குள் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பொது தீட்சிதர்கள் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பிலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்க தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில், 14 பேர் உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து நடராஜர் கோவிலில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, கடந்த 23ம் தேதி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இந்திய தொல்லியல் துறை ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் ராஜேஷ், சேகர் மற்றும் கடலுார் மாவட்ட அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர், நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், கோவில் நுழைவு பகுதியின் இடது புறம் உள்ள அன்னதான கூட கட்டுமான பணி, புதிதாக அமைக்கப்பட்ட கோ சாலை, யானை மண்டபம் மற்றும் கோவில் உள்பிரகாரங்கள், வெளி பிரகாரங்கள், 63 நாயன்மார்கள் கோவில், சித்சபை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொல்லியல் துறையினர் திடீர் ஆய்வு நடத்தியதால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar