Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமும் ஒரு அம்மன்: புகழுடன் வாழ ... சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர் சீர்காழி சட்டை நாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2026
10:08

தஞ்சாவூர்;  ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி நேற்றிரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள ஐயாறப்பர் கோவில் தென் கயிலாயம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அப்பருக்கு தனி சன்னதி உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம். அப்பர் தனது தளர்ந்த வயதில் கயிலை சென்று இறைவனை கண்டே தீருவேன் என்று உறுதியுடன் வடதிசை நோக்கி சென்று கொண்டிருந்தார். இறைவன் ஒரு முனிவர் வடிவில் அவர் முன் தோன்றி கயிலையை மானிடர் தனது ஊனக்கண்ணால் காணல் அரிது என்று திரும்பி செல்லும்படி கூறினார். அப்பர் மறுக்கவே முனிவரும் ஒரு பொய்கையில் மூழ்குமாறு கூறினார். அப்பரும் அவ்வாறே அந்த பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் உள்ள குளத்தில் எழுந்தார். இறைவனும் அவருக்கு கயிலை காட்சியை காட்சியளித்தார் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று இரவு ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து இரவு அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar