வடமதுரையில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2026 10:08
வடமதுரை: காணப்பாடி மண்டையகவுண்டனுார் பாப்பாத்தியம்மன், நாகம்மாள், முருகன், பட்டவன், மதுரைவீரன், கருப்பசாமி கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. ஆற்றில் இருந்து கரகம் ஜோடித்து தலையில் சக்தி தேங்காய் உடைத்து ஊர்வலமாக சன்னதி வந்தது. பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தது. அரண்மனை பொங்கல் வைத்து ஆகாச பூஜை, அம்மன்கள் கங்கை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.
எரியோடு அருகே எ.சித்தூர் வரப்பட்டி பெருமாள், அஜ்ஜப்பன், வீரபத்திரர், பட்டவன், பாப்பாத்தி, மதுரைவீரன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு அம்மன் கரகம் ஜோடித்து ஊர்வலமாக கோயில் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்து அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் நேர்த்திக்கடன் விரதத்துடன் வரிசையாக கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் பூஜாரி சக்திவேல் தேங்காய் உடைத்தார். இன்று (ஆக.17) கரகம் கங்கை செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைகிறது.