பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2026 07:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி ஆதீனத்துக்குட்பட்ட இக்கோயிலில் 2003 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆக. 21 ல் நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் கோபுரம், மூலவர், கொடிமரம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. உமாபதி சிவாச்சாரியார் யாகபூஜைகளை நடத்திவைத்தார். விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரப்பன், திருப்புத்தூர் எம்.எல்.ஏ., சீனிவாச சேதுபதி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.