கோவில் புனரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை, 6 :30 மணி முதல், மங்கள இசையுடன், மகாகணபதி ஹோமம், நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி மற்றும் மங்கள தீபாரதனை நடந்தது.காலை, 8:00 மணி முதல், 9:00 மணி வரை, திருகோபுர விமான நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணி அளவில், மகா கணபதி மற்றும் நவகிரக பரிவார தெய்வங்களுக்கு நன்னீராட்டு விழாவும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜையும், பேரொளி தரிசனமும் நடந்தது. எடப்பள்ளி தவத்திரு. மல்லய்யா சுவாமிகள் மற்றும் சற்குரு அடிகளார் ஆகியோர், நன்னீராட்டு மற்றும் யாகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, , 11:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.