பதிவு செய்த நாள்
04
பிப்
2013
11:02
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், திருச்செந்தூர் பகுதிகளிலும் அண்ணா நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள இடும்பன் கோவில் மண்டபத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுவிருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்டிஒ கொங்கன், இணை ஆணையர் சுதர்சன், தாசில்தார் நல்லசிவம், டவுண் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, ஒன்றிய தலைவர் ஹேமலதா லிங்ககுமார், கோயில் அலுவலக கண்காணிப்பாளர்கள் சாத்தையா, ராமசாமி, ரோஷிணி, உள்துறை கண்காணிப்பாளர் கணேசன், விடுதி மேலாளர் சிவநாதன், விஏஓ செல்விங்கம், ஒன்றிய அதிமுக செயலாளர் ராமசந்திரன், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் லிங்ககுமார், கவுன்சிலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் ஆகியார் செய்திருந்தனர்.இதேபோல் திருச்செந்தூர் ஒன்றிய நகர அதிமுக சார்பில் சன்னதிதெரு முகப்பில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவபடத்திற்கு டவுண் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் ஜெஸ்லர், ஒன்றிய துணைச்செயலாளர் ஐக்கோர்ட்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர சிறுபாண்மைப்பிரிவு செயலாளர் மங்களதாஸ், பேச்சாளர் அர்ச்சுணன், மணல்மேடு மாரிமுத்து உட்பட பலர்கலந்து கொண்டனர். இதே போல் திருச்செந்தூர் ஒன்றிய திமுக சார்பில் வடக்குரதவீதி ஆர்ச் அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் கோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வித்யாசாகர், மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர் கோமதிநாயகம், மாவட்ட பிரதிநிதிகள் குழந்தைவேல், தங்கத்துரை, ராஜமோகன்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.