கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2013 11:02
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை பஞ்சமூர்த்தி சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு ஊஞ்சலில் வைத்து அம்மனுக்கு தாலாட்டும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், குருக்கள் ரவி, அருட்டுறைநாதன் அருட்சபையினர் செய்திருந்தனர்.