* பிறருடைய மகிழ்ச்சியைக் கண்டு சந்தோஷப்படு. * நல்ல சிந்தனை இருந்தால் நிம்மதி தானாக வரும். * உண்மை எது என்பதை கண்டறிவதே விவேகம். * சண்டை வேண்டாம். இல்லாவிட்டால் அமைதி கெடும். * உன்னை விமர்சிக்கும் இடத்தை விட்டு விலகி விடு. * யாரிடமும் பதிலுக்கு பதில் பேசாதே. மவுனமாக இரு. * ஆணவத்தை கைவிடு. ஆர்வமுடன் பணியில் ஈடுபடு. * எளிய ஆடை உடுத்துவதில் விருப்பம் கொள். * பணம் இல்லாமல் வாழ முடியாது. அதற்காக கஞ்சனாக இருக்காதே. * சம்பாதிக்கும் பணத்தில் இரண்டு சதவீதமாவது தர்மம் செய். * பசித்தவருக்கு உணவு கொடுத்த பிறகு சாப்பிடு. * சுவாசிப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சேவை செய்வதே வாழ்க்கை. * பணத்தால் செய்த வினைப்பயனை தடுக்க முடியாது. * குறிக்கோள் உள்ளவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர். * ஏற்றுக் கொண்ட கொள்கையை விட்டு விலகாதே. * இன்ப துன்பம் மாறி மாறி வரும். ஆனால் நிலைப்பதில்லை. * மனிதப்பிறவி மகத்தானது. அதை உணர்ந்து பணியாற்று.