* பிறர் நலமுடன் வாழ வேண்டும் என வாழ்த்து சொல்லு. பகை இருக்காது. * நல்ல வழியில் அறிவைச் செலுத்தி உழைத்தால் உயர்வீர்கள். * எல்லா உயிரும் ஒன்று என எண்ணுவதே அன்பின் செயல். * பிறர் கஷ்டப்படுவதை பார்த்தால் உடனே உதவி செய். * வாழ்த்தும் போது நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும். * நற்செயலால் கிடைக்கும் மனநிறைவே உண்மையான மகிழ்ச்சி. * உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இவை நல்லோர் பண்பு. * உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு. * பணத்திற்கும், பண்பிற்கும் நடக்கும் போட்டியில் பண்பை காப்பாற்று. * குறி தவறி துப்பாக்கி வெடிப்பதைப் போன்றது தான், முறை தவறி செய்யும் செயல். * சாந்த குணம் இருந்தால் உலகமே உன் வசமாகும். * தேவைகளைப் பெருக்காதே. மீறினால் துன்பப்படுவாய். * வாங்கும் கடன், தேங்கும் பணம் இரண்டாலும் வாழ்க்கை கெடும். * பயத்தால் கொடிய நோயான கவலை உண்டாகும். * தீராத பிரச்னை என எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறிவது தான் பிரச்னை.