விழுப்புரம்: பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை (7ம் தேதி) நடக்கிறது. விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு, ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வேதா அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ மகா கணபதி, தனபூசை மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணியிலிருந்து 12 மணி வரை ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நாளை 9.30 மணி முதல் 10 மணிக்குள் விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.