உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 10:10
கோவை: புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. விழாவில் வெற்றிலை மாலை அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.