பதிவு செய்த நாள்
07
பிப்
2013
12:02
திருத்தணி: குமாரகுப்பம் மற்றும் முருகூர் கிராமத்தில், உற்சவர் முருகர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து, நேற்று மதியம், 1:00 மணிக்கு உற்சவர் முருகப் ருமானை வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக, மேல் ருத்தணி நல்லாங்குளம் அருகே சுமைத்தாரர்கள் தோளில் சுமந்து சென்றனர்.பின்னர், அங்கிருந்து டிராக்டரில் குமாரகுப்பம் கிராமத்தில் உள்ள, பெருமாள் கோவிலுக்கு சென்றார். மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், குமாரகுப்பம், முருகூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருக்களிலும், உற்சவர் முருகர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகர் திருவீதியுலா வருவதை ஒட்டி, தெருக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெண்கள் தங்களின் வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தியும் வழிபட்டனர்.