மதுரை: ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 35 வது பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்த மஹா ஸ்வாமிகளின் 37 வது ஆராதனை மதுரையில் நடந்தது. அம்மன் சன்னதி மடத்தில் காலை 8:00 மணிக்கு பாதுகா பூஜை, தீபாராதனை நடந்தன. 10:30 மணி அளவில் ஆராதனை, மதியம் 12:30க்கு தீர்த்த நாராயண பூஜை, தீபாராதனைகள் நடந்தன.
பைபாஸ் ரோட்டில் உள்ள சிருங்கேரி மடத்தில் மாலை 6:00 மணிக்கு சுவாமிகளின் பாதுகைக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடத்தின் தர்மாதிகாரி நடேஷ்ராஜா தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.