Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அயோத்தியாப்பட்டணம் கோவிலில் இன்று ... பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா கோலாகலம்: ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

மோகனூர்: மோகனூர் யூனியன், ஆர்.சி.பேட்டப்பாளையத்தில், புனித செசீலி ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, சிறப்பு தயாரிப்பு விழா திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு, வேண்டுதல் தேர் திருவிழா திருப்பலியும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9 மணிக்கு, ராசிபுரம் பங்குதந்தை தியோடர் செல்வராஜ் தலைமையில், திருவிழா திருப்பலியும், மாலை, 6.30 மணிக்கு, நாமக்கல் கொசவம்பட்டி பங்குதந்தை ஜான்கென்னடி தலைமையில், திருப்பலியும் நடந்தது. அன்று மாலை, 6.45 மணிக்கு, புனித செபஸ்தியார் அழகுத்தேர் பவனி நடந்தது. மின் அலங்காரத்தேரில் எழுந்தருளிய புனிதர், கீழப்பேட்டப்பாளையம், புதுத்தெரு, ப.வேலூர் சாலை, சர்க்கரை ஆலை, வண்டிகேட் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை அணிவித்தும் புனிதரை வணங்கினர். நேற்று காலை, 8 மணிக்கு, அனந்த ரெட்டியார் பொங்கல், 11 மணிக்கு நன்றித்திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar