Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித செபஸ்தியார் தேர்த்திருவிழா ... காளியம்மன் கோவிலில் மஹா நவசண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

ராசிபுரம்: பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராசிபுரம் அடுத்த மேட்டுக்காட்டில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பொங்கல் விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம், பால்குடம் ஊர்வலத்துடன் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 9 மணிக்கு அலகு குத்தியும், கரகம் எடுத்தும் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 5 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீக்குண்டம் இறங்கி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 6 மணிக்கு, எருமை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சன்னதி எதிரே, "மெகா சைஸ் குழி வெட்டப்பட்டு, மூன்றடி அரிவளால் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட எருமை கிடாவை வெட்டி, குழியில் போட்டு மூடப்பட்டது. அதை தொடர்ந்து, வாண வேடிக்கை நடந்தது. இன்று (ஃபிப்., 7) இரவு, 9 மணிக்கு, சத்தாபரணத்தையொட்டி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (ஃபிப்., 8) காலை, 8 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar