Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவிலில் மஹா நவசண்டி ... ஓய்வு காலத்தில் வருமானம் இன்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
12:02

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா இன்று(பிப். 7) காலை 10 மணிக்கு பாலாபிஷேகத்துடன் துவங்குகிறது. பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா இன்று காலை 10 மணிக்கு பாலாபிஷேகத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், பூ அலங்காரமும் நடைபெறும். திருவிழாவின் இரண்டாவது நாளில்(பிப். 8) காலை 9 மணிக்கு பூச்சொரியல் விழா, பூத்தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு, மேற்குரத வீதி, கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபால சமுத்திரம் தெரு, கிழக்குரத வீதி, தெற்கு ரத வீதிகளை சுற்றி சந்நிதி வந்து சேரும். அன்று முழுவதும் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். பிப். 12 செவ்வாய் பகல் 12 மணிக்கு கொடியேற்றப்படும். பிப். 15 வெள்ளியன்று காலை 10 மணிக்கு கரகத்துடன் கோயிலில் இருந்து அம்மன் புறப்பட்டு மேற்குரத வீதி, வடக்கு ரத வீதி, கோயில் தெரு, மெயின் ரோடு வழியாக பெரிய கடை வீதி, தெற்கு ரத வீதி வழியாக சன்னதி வந்தடையும்.  பிப். 26 செவ்வாய் அன்று கோயிலில் அம்மன் லட்சுமி அலங்காரத்துடன் தெப்ப உற்சவம் நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன், பரம்பரை அறங்காவலர்கள் பாலசுந்தரம், சுதந்திரராஜன், கோபாலன், மகாலட்சுமி, முத்துராஜ், சுபாஷினி, பாலகுரு, ராமமூர்த்தி, கணேசன் செய்துள்ளனர். தங்க ரத புறப்பாடு; கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் பிப். 26 வரை தங்கரத புறப்பாடு இல்லை என சண்முக முத்தரசப்பன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar