பதிவு செய்த நாள்
08
பிப்
2013
11:02
தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த திருவையாறு வடகயிலாயம் கோவிலில், புராண கால சோழ மன்னர் ககுத்தன் புடைப்பு சிற்பத்தை, தஞ்சை வரலாற்று ஆய்வாளர் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். தஞ்சை மாவட்டம், திருவையாறில் பஞ்சநதீஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள வடகயிலாயம் என்ற உலோகமாதேவீஸ்வரம் கோவில், முதலாம் ராஜராஜனின் மனைவி உலோகமாதேவியார், தன் பெயரில் கட்டியது. இந்த கோவிலுள்ள கருவறை மற்றும் முன்மண்டபத்தின் வெ ளியில் இருபுற சுவர்களில் உள்ள தோரணங்களில், சிற்றுருவ புடைப்பு சிற்பங்களை கள ஆய்வின் போது, தஞ்சை பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில் லை கோவிந்தராஜன், மன்னை ராஜகோபால ஸ்வாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், புலவர் ஜெயராமன் ஆகியோர் கண்டனர். தொடர்ந்து, அந்த புடைப்பு சிற்பத்தின் கால கட்ட ம் குறித்து, பல்வேறு தகவல்கø ள திரட்டி வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுவினர் கூறியதாவது: கோஷ்டத்தின் (வளைவு) மேலுள்ள தோரணத்தில் பிச்சாடனர், காலசம்ஹாரர், லிங்கத்கை வழிபடும் மன்னன் என, பல சிற்பங்கள் உள்ளன. இதில், திரை (வரி) செலுத்துவதற்காக சிற்றரசர் ஒருவர், திரை பெ õருட்களுடன் யானை மீது அ மர்ந்து, யானைகள் மற்றும் குதிரைகள் சூழ காட்சியளிக்கிறார். மேலும், அந்த சிற்பத்தை அடுத்துள்ள தோரண சிற்பத்தில், காளை தலையை உயர்த்திய நிலையிலுள்ளது. மகுடத்துடன் ஒருவர் அந்த காளையின் திமில் மீது ஒரு கையை ஊன்றியும், ஒரு காலை மடக்கி அமர்ந்த நிø லயிலும் புடைப்பு சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது, சூரிய குல தோன்றலான இச்சவாகுவின் மகனும், சோழர் குலத்தின் முன்னோடியுமான ககுத்தனின் உருவச் சிற்பம் என, ஆய்வில் உறுதிபட தெரியவந்துள்ளது. இம்மன்னன் பற்றி விஷ்ணுபுராணத்திலும், திருவாலங்காட்டு செப்பேடுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. புராண கால சோழமன்னன் ககுத்தன் குறித்து சார்லாச் செப்பேட்டிலும், கன்னியாகுமரி கல்வெட்டிலும், குறிப்புகள் காணப்படுகின்றன. முதலாம் ராஜராஜசோழனின், சூரிய குல பெருமைகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில், இந்த சிற்பத்தை உலோகமாதேவியார் அமைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.