பழநி: முருகனின் மூன்றாம் படை வீடாகிய பழநி திருஆவினன்குடி கோயிலுக்கு, வரும் வைகாசியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ.94 லட்சம் மதிப்பீட்டில், ராஜகோபுரம் உள்ளிட்ட 5 கோபுரங்கள், மடப்பள்ளி, தரைத்தம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் வைகாசியில் நடைபெற உள்ளது. "ஊர்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, ரூ. 2 கோடியில் திருப்பணிகள் செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணை ஆணையர் பாஸ்கரன் கூறினார்.