ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம் புகைப்படம் எடுக்க தடை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 12:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது. இதனை படம் எடுக்க சென்ற புகைப்படக்காரர்களுக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்தது.
நேற்று ராமேஸ்வரம் கோயிலில் அம்மன் சன்னதி அருகே கொழு பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு கோயில் குருக்கள் ஸ்ரீ சக்கர பூஜை செய்து நவராத்திரி விழா துவங்கியது. இரவு 7:00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கிசேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைதொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புகைப்படகாரர்களுக்கு தடை : ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி துவக்க விழா ஸ்ரீசக்கர பூஜை மற்றும் அம்மன் அலங்காரத்தை புகைப்படகாரர்கள் படம் எடுத்து
பத்திரிகையில் வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்று கோயில் ஊழியர்கள், புகைப்படகாரர்களை படம் எடுக்க விடாமல் தடுத்து வெளியேற்றனர். இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சுரேஷிடம் புகைப்படக்காரர்கள் வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை.