Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் நவராத்திரி விழா ... மைசூரு தசரா சாமானிய மக்களின் திருவிழாவாக மாறியுள்ளது; அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமி பெருமிதம் மைசூரு தசரா சாமானிய மக்களின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்: கொலு வைத்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்: கொலு வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2026
12:10

கோவை

நவராத்திரி உற்சவத்தை ஒட்டி, ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், அபிநவ வித்யாதீர்த்த பிரவச்சன மண்டபத்தில் கொலுப்படிகள் வைக்கும் வைபவமும் இசைக்கச்சேரியும் நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.

ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோயிலில் 50வது ஆண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. காலை 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷே கம், 9 மணிக்கு தேவி மஹாத்மிய பாராயணம், 10 மணிக்கு நவாவர்ணம், ஸ்ரீ சண்டிஹோமம் நடந்தது.

மாலை 6 மணிக்கு சுவாமிக்கு புஷ்ப அலங்காரமும் ஸ்ரீ லலிதா திரிசதி பாராயணம் நடந்தது. உற்சவருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் வழக்கமான பூர்வாங்க பூஜைகளை தொடர்ந்து சாரதாம்பாள் பிராம்ஹி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில், மோகன், முகுந்தன் மற்றும் ஸ்ரீராம் நடேசன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.

வைசியாள் வீதியிலுள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

கோவை வடக்கு பகுதியில், துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில், விநாயகர் கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் பல்வேறு வடிவங்கள் பக்தர்களால் வணங்கப்படுகின்றன. இதில், முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன் வழிபாடு, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்மன் வழிபாடு, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்மன் வழிபாடு நடக்கிறது.

பெண்மையின் சக்தியை போற்றுவதோடு, கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை வேண்டி பக்தர்கள் வழிபடுகின்றனர். நவராத்திரி காலத்தில் வீடுகளில் படிக்கட்டுகள் அமைத்து, கடவுள் சிலைகள், புராண கதாபாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பல்வேறு வாழ்க்கை முறைகளை சித்தரிக்கும் வகையில் கொலு படைக்கின்றனர்.

வீடுகளிலும், கோவில்களிலும், தினமும் மாலை விளக்கேற்றி வழிபடுதல் நிகழ்ச்சியில், பாடல்கள், பஜனைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவிலில் கொலு வழிபாடு நேற்று துவங்கியது; திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல, தடாகம் புதுார், உச்சையனுார், மகாலட்சுமி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி குருபூஜை ஒன்பது நாட்களும் தொடர்ந்து நடக்கவுள்ளன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி

ஐயப்பன் கோவிலில் நவராத்திரி விழா கொலு துவங்கியது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா, 9 நாள் கொண்டாடப்படுகிறது. இதில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்கின்றனர். இந்நிகழ்வு, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கோவில்களில், 9 நாட்கள் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுவது வழக்கம். இதில், பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடக்கிறது. இதில், பக்தர்கள் பலர் கொலு வழிபாட்டில் பங்கேற்று பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நவராத்திரி விழாவின் துவக்க நாளையொட்டி பாரம்பரிய முறைப்படி கொலு அமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து பக்தி பாடல்களை பாடினர். நவராத்திரி விழாவின் ஆன்மிக சிறப்பு, இந்திய பாரம்பரியம், பண்பாட்டு மகத்துவம் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் முன்னிலையில் விழா நடந்தது. இறை நம்பிக்கை, ஒற்றுமை, நமது பாரம்பரிய கலாசாரத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் நவராத்திரி விழா கொலு அமைத்து கொண்டாடப்பட்டது.

உடுமலை


உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், நவராத்திரி விழா நேற்று மகேஸ்வரி அம்பிகை அலங்காரத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது. மாலை 6:30 மணிக்கு, ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கோவில் வளாகத்தில் நடக்கிறது. இதே போல், உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும் நேற்று நவராத்திரி விழா துவக்கத்தையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

வால்பாறை


வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனர். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தேனி


மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. ஆயுத பூஜை, விஜயதசமிக்கு முந்தைய 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. வீடுகள்,கோயில்களில் கொலுக்கள் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். அம்மன் தினசரி ஒரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனியில் பத்ரகாளி அம்மன், முத்துமாரியம்மன், காமாட்சியம்மன் சாவுத்தராயன் கோயில்களில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. நவராத்திரி விழாவை முன்னிட்டு அல்லிநகரம் கிராம இலக்கிய மன்றம் சார்பில் உழவர் சந்தை அருகே உள்ள வசந்த மகாலில் தினசரி சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

திண்டுக்கல்

மாவட்டத்தில் நவராத்திரி விழா நேற்று விமர்சையாக துவங்கிய நிலையில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் பிரமாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பெருவிழா நேற்று (அக்.,11ல்) முறைப்படி துவங்கியது. அக்.,19 வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும் நவராத்திரி விழா அக்.,20ல் விஜயதசமியுடன் நிறைவடைகிறது. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான பத்மகிரீஸ்வரர் சமேத அபிராமி அம்மன் திருக்கோயில் உட்பட அனைத்து சிவாலயங்கள், சக்தி பீடங்களில் நவராத்திரி விழா விமர்சையாக நேற்று துவங்கியது. கோயில் பிரகாரத்தில் பிரமாண்ட நவராத்திரி கொலு படிகள் அமைக்கப்பட்டு, பல வண்ணக் கலைநயமிக்க சுவாமி சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு உள்ளன. நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு பல்வேறு ஆயுதங்கள், ஆபரணங்கள், மலர்களுடன் பிரத்யேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. இரவில் உள் பிரகாரப் புறப்பாடு நடக்கும். இரவில் அம்பிகைக்கும், ஈசனுக்கும் சிறப்பு ஊஞ்சல் சேவை நடக்கிறது. நவராத்திரி முதல்நாள் வழிபாட்டை முன்னிட்டு நேற்று காப்புகட்டுதல் அலங்காரத்தில் அம்பிகை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயிலுக்கு வந்த சுமங்கலி பெண்கள் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நவராத்திரி இசை உற்ஸவம் நடந்தது. இதில் மாணவிகள் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேறியது.

சென்னை

நவராத்திரியை முன்னிட்டு, சாய்ராம் வித்யாலயா கல்வி நிறுவனம் சார்பில், ‘நவராத்திரி ராக ரூபகம்’ என்ற பக்தி இசை நிகழ்ச்சி, மடிப்பாக்கம் சாய்ராம் வித்யாலயா பள்ளியில், நேற்று தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. சாய்ராம் கல்வி நிறுவனத்தின் சித்த மருத்துவத் துறை இயக்குநர் நவீன்குமார், அவரது மனைவி காயத்ரி தேவி ஆகியோர், நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

‘லஷ்மன் ஸ்ருதி’ நிறுவனர் லட்சுமணன், வயலின் வித்தகர் ஹரி என் சாஸ்திரி, ‘அவிங்னா வென்ஜர்ஸ்’ நிறுவனர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று, அபிஷேக் ராஜு குழுவினரின், பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ‘கீ போர்டு’ கலைஞர் -கிருஷ்ணா, ‘தபேலா-’ கவியரசன், ‘ரிதம்’ -சரவணன் மற்றும் பாடகர்கள் சதீஷ், சாய் சந்த் ஆகியோர், பக்தி பாடல்களுக்கு இசையமைத்து பாடினர். தினமும் மாலை 6:30 முதல் 8:30 மணி வரை, பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளன. அனுமதி இலவசம்.


பண்ருட்டி


பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில், நவராத்திரி முதல் நாள் உற்சவத்தில், உற்சவர் அம்மன் கொலுவுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று முதல் நாள் நவராத்திரி கொலு பூஜை வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி உற்சவர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar