Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் நவராத்திரி விழா ... பாலக்காடு பெரிய மாரியம்மன் கோவிலில் பிரம்மாண்ட நவராத்திரி கொலு: 10 அடி உயர விக்கிரகங்களைக் காண குவியும் பக்தர்கள் பாலக்காடு பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா சாமானிய மக்களின் திருவிழாவாக மாறியுள்ளது; அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமி பெருமிதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா சாமானிய மக்களின் திருவிழாவாக மாறியுள்ளது; அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமி பெருமிதம்

பதிவு செய்த நாள்

12 அக்
2026
12:10

மைசூரு: ‘‘மைசூரு தசரா, சாமானிய மக்களின் திருவிழாவாக மாறியுள்ளது,’’ என, தசராவை துவக்கி வைத்த மடாதிபதி அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமிகள் பெருமிதத்துடன் கூறினார்.


உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று துவங்கியது. சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில், முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காலை 11:50 மணி முதல் மதியம் 12:13 மணி வரையிலான தனுர் லக்னத்தில் பூஜை செயது, கொப்பால் கவிமடத்தின் மடாதிபதி ஸ்ரீஅபினவ கவிசித்தேஸ்வர மஹாசுவாமிகள், தசராவை துவக்கி வைத்தார்.


கடின உழைப்பு பின், அங்கு நடந்த நிகழ்ச்சியில் மடாதிபதி பேசியதாவது: கலாசாரம், அரண்மனை, துாய்மை, ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற நகரமாக மைசூரு உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நகரத்தில் நடக்கும் தசரா திருவிழாவின் பின்னணியில் ஆயிரக்கணக்கான கைகளின் கடின உழைப்பு உள்ளது. ஒரு காலத்தில் மன்னர்களின் திருவிழாவாக இருந்த மைசூரு தசரா தற்போது சாமானிய மக்களின் திருவிழாவாக மாறியுள்ளது. தசராவை துவக்கி வைக்கும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல. ஆனாலும் மகான்களால் ஏற்றப்பட்ட விளக்கு அணையக் கூடாது என்ற பிரார்த்தனையுடன் இங்கு வந்துள்ளேன். நல்ல மழை பெய்து விளைச்சல் கிடைக்க வேண்டும்; விவசாயிகள் முகத்தில் புன்னகை வர வேண்டும் என்று, சாமுண்டீஸ்வரி தாயிடம் பிரார்த்தனை செய்தேன். மைசூருக்காக மன்னர் குடும்பத்தின் பங்களிப்பு அளப்பரியது.


* கல்வி வளர்ச்சி: தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அரிசியை பதிவிறக்கம் செய்ய முடியாது. விவசாயிகளால் தான் நமக்கு உணவு கிடைக்கிறது. அவர்களின் கடின உழைப்பை மதிக்க வேண்டும். காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா ஆறுகள் வறண்டால், விவசாயிகள், மக்கள் வாழ்க்கை பாதிக்கப்படும். நிலம், நீர், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு. இதுபோல கல்வி வளர்ச்சிக்காகவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


* பாரம்பரிய கண்ணாடி முதல்வர் சிவகுமார் பேசியதாவது: முதல்வராக தசரா பண்டிகையை துவக்கி வைப்பதை, எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இப்போது நடப்பது ‘மக்கள் தசரா’. தசரா கொண்டாட்டம் மைசூருடன் நிற்காமல், மாநிலம் முழுதும் பரவியுள்ளது. அடுத்த 11 நாட்களுக்கு மைசூரு வழியாக இந்தியா தெரியும். நாட்டின் பாரம்பரிய கண்ணாடியாக விளங்கும் தசரா பண்டிகை, நாட்டின் பெருமையின் சின்னம். கலாசாரத்தில் இருந்து வளரும் ஒரே நகரம் மைசூரு தான்.


* வாழ்க்கை முன்னேற்றம்: அரசு செய்ய வேண்டிய பல சமூகப் பணிகளை செய்வதால், மடாதிபதிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தசராவை துவக்கி வைத்ததன் மூலம் இந்த பண்டிகைக்கு, மடாதிபதி அபினவ ஸ்ரீ கவிசித்தேஸ்வர மஹாசுவாமிகள் புதிய ஆற்றல் அளித்துள்ளார். அவரது சமூக சேவை நாட்டிற்கே முன்மாதிரி. தசராவில் விமான கண்காட்சிக்கு அனுமதி அளித்த, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் நன்றி. தசரா என்பது ஒரு மதத்தின் கொண்டாட்டம் இல்லை. பாரம்பரியம், கலை, கலாசாரம், சமூக நல்லிணக்கம், மக்கள் எண்ணத்தை ஒன்றிணைக்கும் திருவிழா. இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதன் மூலம், தசராவின் பெருமையை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தனியார் தர்பார் நடத்திய யதுவீர்


மைசூரு தசராவை முன்னிட்டு, அரண்மனையில் உள்ள அம்பா விலாஸ் தர்பார் அரங்கில், இளவரசர் யதுவீர் நேற்று காலை 11:45 மணி முதல் மதியம் 12:05 மணி வரை 20 நிமிடங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து, தனியார் தர்பார் நடத்தினார். முன்னதாக அரண்மனையில் உள்ள அனைத்து கோவில்களிலும் பூஜை செய்தார். தனது தாய் பிரமோதா தேவி உடையார் தலைமையில், கணபதி பூஜை; சண்டி யாகம்; ஹோமம் நடத்தினார். அதன்பின் அவருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகா குமாரிக்கு, கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது.


ஜனநாயக கடமைக்கு முக்கியத்துவம்


மைசூரு தசராவை முன்னிட்டு குப்பண்ணா பூங்காவில் நேற்று துவங்கிய மலர் கண்காட்சியில், ஜனநாயக கடமையான ஓட்டுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. மலர் கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் சிவகுமார், ‘உங்கள் ஓட்டு, உங்கள் குரல், நமது தேசம்’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டு இருந்த, பதாகையை கைகூப்பி வணங்கினார். பின், மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார். தசராவை முன்னிட்டு மைசூரில் பல கலைநிகழ்ச்சிகளும் துவங்கி உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar