தை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் அய்யாவாடி பிரத்யங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம் துவங்கியது. சனிக்கிழமை மதியம் முதல் ஞாயிறு மதியம் வரை உள்ள அமாவாசை உள்ளது. எனவே இரண்டு கட்டமாக நிகும்பலா யாகம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக சனிக்கிழமை நடக்கும் யாகத்தை சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் பத்து சிவாச்சாரியார்கள் இந்த யாகத்தை துவக்கினர். யாகத்தில் அம்மனை எழுந்தருளச்செய்து, பூஜையை நடத்தினர். இரவு ஏழு மணிக்கு தண்டபாணி சிவாச்சாரியார் மிளகாய் வற்றலை யாகத்தில் போட்டு யாகத்தை சிறப்பிக்கிறார். ஞாயிற்றுக்கிழமையும் இந்த யாகம் நடைபெறும்.