சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு: நந்தி பகவானுக்கு 21 வகை திரவிய அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2026 06:11
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.முன்னதாக நந்தி பகவானுக்கு 21 வகை திரவிய அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது.பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம்,காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கோபால்பட்டி சிவன் கோவில்,கணவாய்ப்பட்டி சிவன் கோயில்,குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.