பதிவு செய்த நாள்
12
பிப்
2013
11:02
சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மாலை திறக்கப்படுகிறது. ஐந்து நாள் நடைபெறும் பூஜைக்குப் பின், 17ம் தேதி நடை அடைக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடை திறந்ததும், வேறு பூஜைகள் இருக்காது. நாளை அதிகாலை, கணபதி ஹோமத்துடன், வழக்கமான பூஜைகள் துவங்கும். நடை திறந்திருக்கும் நாட்களில், சிறப்பு பூஜைகளான, உதயாஸ்தமனம் மற்றும் படி பூஜைகள் நடைபெறும்.மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும், 17ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். பின், பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர உற்சவத்திற்காக, மார்ச், 14ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படும்.