Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை காவிரி துலா ... திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாணம் உற்சவம் திருமுருகன்பூண்டி திருமுருகநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை குறிஞ்சேரியில் வீரன் சிலை: ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை குறிஞ்சேரியில் வீரன் சிலை: ஆவணப்படுத்திய வரலாற்று ஆய்வு நடுவம்

பதிவு செய்த நாள்

16 நவ
2026
02:11

உடுமலை: உடுமலை அருகே, குறிஞ்சேரியில், நாயக்கர் கால வீரர் சிலையை, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த சிவக்குமார், அருட்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்து, ஆவணப்படுத்தியுள்ளனர். களப்பணியின் போது, தமிழாசிரியர் வீரய்யன், தேசிய நல்லாசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது:

குறிஞ்சேரி கிராமத்தில், மூன்று அடி உயரம், ஒரு அடி அகலத்தில் இருக்கும் இந்த ஆண் சிற்பம், பிற்கால நாயக்கர்கள் காலமாகவோ அல்லது பாளையக்காரர்கள் காலமாகவோ இருக்கலாம்.

தற்போது, மக்கள் வழிபாட்டில் உள்ள இந்த சிலையின், வலது கரத்தில் உயர்த்திய நிலையில் கொடுவாளும், இடது கரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் தண்டம் அல்லது கதை போன்ற ஆயுதத்தை ஊன்றிய நிலையில், சிலை காணப்படுகிறது.

கால்களில் வீரக்கழல்கள் போன்ற அணிகலன்களும், வலிமையான பாதக்குறடுகளும் அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முகத்தில் முறுக்கு மீசையும் தோள்களின் பக்கவாட்டில் முழங்கால் வரை தொங்கும் மாலையும், காதுகளில் குண்டலமும், கைகளில் வளையமும், கங்கணமும் காணப்படுகின்றன.

உருட்டி விழிக்கும் கண்களும், உறுதியாக நிற்கும் தோற்றமும், தீயவரைப் பயமுறுத்துவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பும், நம்பிக்கையையும் அளிப்பதாக காணப்படுகிறது.

தமிழகத்தில், பரவலாக வணங்கப்படும் கருப்பண்ணசாமி, வேட்டைக்கார சாமி என, எல்லை தெய்வமாக அல்லது ஆளுமையான மக்கள் காவலராகவும், முன்னோர் வழிபாட்டின் குறியீடுகளாகவும் இருக்கலாம்.

இவ்வாறு, கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு ... மேலும்
 
temple news
சண்டிகர்: சத் பூஜையை முன்னிட்டு சண்டிகர் செக்டர் 42 ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சூரிய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உச்சத்தில் தங்க சூரிய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்-  சுவாமிமலை முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா இன்று (16ம் தேதி காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar