Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை கார்த்திகை தீபத் ... கோவில்களில் கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம் கோவில்களில் கந்த சஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்களில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு

பதிவு செய்த நாள்

18 நவ
2026
11:11

விழுப்புரம்


விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு நடைபெற்றது.


விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு என்பது மகாவிஷ்ணுவை வழிபட மிக உகந்த தருணம் ஆண்டிற்கு நான்கு முறை மட்டுமே வரும் மிக சிறப்பு வாய்ந்த வழிபாடாகும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய தமிழ் மாதங்களில் 1ம் தேதி மட்டுமே மகாவிஷ்ணு புண்ணிய கால வழிபட்டிற்கு உகந்த நாளாகும்.

கார்த்திகை 1ம் தேதியை யொட்டி, நேற்று விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரை விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு நடைபெற்றது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொட்டு வணங்கி, 27 முறை வலம் வந்து பிரதட்சணம் செய்து ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மலரை கொடிமரத்தில் சமர்பித்தனர். இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு துளசி மாலை சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த வழிபாட்டினால், கடன் சுமை, வறுமை நீங்குதல், திருமண தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் விருத்தி உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐ தீகமாகும்.

பொள்ளாச்சி:


 பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விஷ்ணுபதி புண்யா கால சிறப்பு பூஜை நடந்தது.


விஷ்ணுபதி புண்யா காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைக்க வேண்டும்.

இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் வழிபட்டு வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால் நிலம், வீடு வாங்க தாயாரின் அருள் பெற முடியும் என்பது ஐதீகம்.

பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணு புண்ணிய கால பூஜை நேற்று நடந்தது. அதிகாலை, 2:30 மணிக்கு பெருமாளுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் திரளாக பங்கேற்று, கொடி மரத்தை வணங்கி, பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். அறங்காவலர் குழு தலைவர் மணி, அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

* டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை, 4:30 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:40 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் 27 மலர்களை கொண்டு கொடிகம்பத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர்.

வில்லியனுார்


வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு நடந்தது.


ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதம் முதல் நாளில் வரும் விஷ்ணுபதி புண்ணிய காலங்களில் பக்தர்கள் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டின் கடைசி விஷ்ணுபதி புண்ணிய காலமாக நேற்று நடந்ததால் அதிகாலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரை, வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வழிபட்டனர்.

ஒவ்வொரு பக்தர்களும் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில், கொடிமரம் மற்றும் கருவறை வெளி பிரகாரத்தை 27 முறை பிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

திருப்பூர்


விஷ்ணுபதி புண்ணியகாலத்தில், திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட நடத்தினர்.


ஒவ்வொரு ஆண்டும், நான்குமுறை விஷ்ணுபதி புண்ணியகாலம் நிகழ்கிறது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்குள் சூரியன் சஞ்சாரம் செய்யும் போது, விஷ்ணுவின் தெய்வீக ஆற்றல் இணைந்து ஆன்மிக சக்தி பெருகுவதாக ஐ தீகம். அதன்படி, கார்த்திகை மாதம் 1ம் தேதியான நேற்று, விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு நடந்தது. காலை, 6:40 மணி முதல், காலை, 10:30 மணி வரை, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கொடுவாய் விண்ணளந்த பெரியபெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அதிகாலை முதல், காலை, 11:0 மணி வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வழிபட்டனர். ஒவ்வொரு பக்தர்களும்,பூக்களுடன் வந்து, கோவில் வெளி பிரகாரத்தை, 27 முறை வலம் வந்து வழிபட்டனர். ஒவ்வொரு சுற்று முடிவிலும், கொடிமரத்துக்கு மலர்கள் மற்றும் நெல்லிக்கனியை சமர்ப்பித்து வழிபட்டனர். நிறைவாக, ஸ்ரீகனகவல்லி, பூமாதேவி மற்றும் வீரராகவப்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதேபோல, அவிநாசி, திருமுருகன்பூண்டியிலுள்ள ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில், பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவில், கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை வலம் வந்து பிரார்த்தனை செய்தனர்.

வடமதுரை:

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டிற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 6:00 மணிக்கு நடை திறந்ததும் கொடிமரத்தை வணங்கி, மலர்களை சமர்ப்பித்து கோயில் பிரகாரத்தை 27 முறை வலம் வந்து வழிபட்டனர். பின்னர் கோயிலில் வழிபட்டு சென்றனர்.

நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரம் பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் வழிபாடுகள் துவங்கியது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் உட்பட உட்பட மாவட்டத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு வழிபாடு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல கால விரதம் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசுகாத்த அம்மன் கோவிலில் உள்ள அய்யப்ப சுவாமிக்கு நேற்று மஹா அபிஷேகமும், ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: சிவன் கோவில் கட்டுமானப்பணிகளை மீண்டும் விரைந்து துவங்க கோரிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar