பதிவு செய்த நாள்
18
நவ
2026
01:11
சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் பம்பைக்கு, 100 சிறப்பு சொகுசு பஸ்கள், வரும் ஜன., 17 வரை இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவின்போது, அதிகளவில் மக்கள் செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலுார், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, கேரள மாநிலம் பம்பைக்கு சொகுசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ‘ஏசி’ மற்றும் ’ஏசி’ அல்லாத பஸ்கள், படுக்கை வசதி என, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியர் www.tns tc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு, வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும். பஸ்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களுக்கு, 94450 14446, 94450 14424 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.