Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திலி பாலமுருகன் கோவில் சத்ரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் காண பக்தர்களுக்கு இலவச டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் காண பக்தர்களுக்கு இலவச டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு

பதிவு செய்த நாள்

18 நவ
2026
01:11

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தரிசனத்திற்கு, கடந்த ஆண்டைப் போல் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், இந்த ஆண்டு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டு நடந்த திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது, பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனத்திற்காக, தலா 500 மற்றும் 600 ரூபாய் மதிப்புள்ள கட்டண நுழைவுச்சீட்டுகள் 1,600 எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், தரிசன டிக்கெட்டை இலவசமாக முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை 3,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது.  annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். வரும் 24ஆம் தேதி நடக்கவுள்ள பரணி தீபத்திற்கு, திருவண்ணாமலை மாவட்டச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 மற்றும் பிற மாவட்ட பக்தர்களுக்கு 500 நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். 


மகா தீபத்திற்கு உள்ளூர் பக்தர்களுக்கு 1,000 மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு 1,000 நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும். இவற்றை பெற விரும்பும் பக்தர்கள், தங்களின் ஆதார் எண், மொபைல் எண் பயன்படுத்தி  வரும் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் 20 ஆம் தேதி மாலை 3 மணி வரை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். 20ம் தேதி மாலை 4 மணிக்கு, தானியங்கி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். குலுக்கலில் தரிசன வாய்ப்பை பெறும் பக்தர்களுக்கு, அது குறித்த விபரம் எஸ்எம்ஸ் மூலம் அனுப்பப்படும். அந்த பக்தர்கள் இ - டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பரணி தீபத்திற்கு பதிவு செய்வோர், மகா தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. மகா தீபத்திற்கு பதிவு செய்வோர், பரணி தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது என, கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம்நாள் காலை உற்சவத்தில், தங்க நாக ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவிலில் செல்வ முத்துக்குமார சுவாமி தெய்வானை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல கால விரதம் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
அயோத்தி, ஸ்ரீராமர் கோயில் வளாகத்தில், ஸ்ரீராம் நிவாஸ் அருகே கோசாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar