மானாமதுரை: மானாமதுரை காந்தி சிலை அருகே உள்ள பூமி வரத யோக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு வருடம் முடிந்ததை தொடர்ந்து இன்று வருஷாபிஷேக விழாவிற்காக அதிகாலை விநாயகருக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் முன்பாக சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்களை வளர்த்து புனித நீரை ஊற்றி விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். தீபாராதானை, பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் பக்தர்கள் செய்திருந்தனர்.