திருப்பூர் அய்யப்பன் கோவிலில் 41 நாள் தொடர் அன்னதானம் சூப்ரீம் மொபைல்ஸ் ஆன்மிகப்பணி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2026 12:11
திருப்பூர்: திருப்பூர் அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு, 41 நாட்களும் தினமும் காலை பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்க சூப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
கார்த்திகை மாதம் துவங்கியுள்ள நிலையில், அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, தினமும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். அதிகாலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பசியை போக்கும் நோக்கில், மண்டல பூஜை நிறைவடையும் வரை தொடர்ந்து, 41 நாட்களும் காலை உணவு வழங்கும் பணியை சூப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இறைவன் மீதான பக்தியை வழிபாட்டுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இறைவனை நாடி வரும் பக்தர்களுக்குச் சேவை செய்வதன் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம். ஒரு நாள் மட்டுமின்றி, தொடர்ந்து 41 நாட்களும் எவ்விததடையுமின்றி அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியுடன் ஆன்மிகம் மற்றும் சமூக சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது,’’ என்றார்.