Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்பாஜியில் ஸ்ரீ காமாட்சி ஏககாவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக கோவில்களில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழக கோவில்களில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

23 நவ
2026
11:11

கோவை

நெகமம், காளியப்பன்பாளையம் உச்சி மாகாளியம்மன், விநாயகர் மற்றும் ஐயப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி கடந்த, 20ம் தேதி, திருவிளக்கு வழிபாடு, வேள்வி வழிபாடு, காப்புக்கட்டுதல், முளைப்பாலிகை எடுத்து வருதல், முதற்கால வேள்வி, பேரொளி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் (21ம் தேதி), திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, இரண்டாம் கால கேள்வி, மலர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், கோபுர கலசங்கள் நிறுவுதல், மூன்றாம் கால வேள்வி, 108 மூலிகை திரவியாகுதி, எண் வகை மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று, நான்காம் கால வேள்வி, நாடி சந்தானம், பேரொளி வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடு உள்ளிட்டவையும், தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. இதில், நெகமம் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தச தரிசனம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.

அவிநாசி


திருமுருகன்பூண்டி, காமாட்சியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீன திருமடம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் தலைமையில், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சிதாச சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 5-ம் தேதி யாகசாலை முகூர்த்தக்கால் நடுதல், முளைப்பாரி போடுதல், விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, 20-ம் தேதி முதல் கால யாக பூஜையும், 21-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை நான்காம் கால யாக பூஜையைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்கள் மற்றும் காமாட்சியம்மன் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு காலை 8:25 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, கோவில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை, கணபதி நகரில் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை கணபதி நகரில், பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர், கோடீஸ்வர சாய்பாபா, ஆஞ்சநேயர், சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர், கால பைரவர், விஷ்ணு பாதாள செம்பு அக்னீஸ்வரர், பிரம்மா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை 4ம் கால பூஜைகள், தத்துவார்ச்சனை, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விமான கோபுர கலசங்கள், மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொழை சாவடிக்குப்பத்தில் ஸ்ரீ வீரனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 20 ந்தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக் ஷா பந்தனம், முதல் கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால பூஜை, நாடிசந்தானம் நடந்த, காலை 8 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்

திருப்பந்தியூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று மஹா சாந்தி கும்பாபிஷேக விழா நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி – பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில். இங்கு, விழா காலங்களில் ஏற்பட்ட குறைகள் நீங்கவும், ஊர் மற்றும் உலக மக்கள் அமைதிக்காகவும், நேற்று மஹா சாந்தி ஹோம கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை, யாக பூஜை நடந்தது. பின், கோவில் கோபுர கலசங்கள் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திருப்பந்தியூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது. செங்கல்பட்டு அருகே உள்ள நத்தம் பகுதியில், புகழ்பெற்ற ஓசூரம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இரு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கும்பாபிஷே கம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி, நேற்று காலை சிறப்பு யாகத்துடன் ஓசூரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதன்பின், ஓசூரம்மனுக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.

காஞ்சிபுரம்

விஷகண்டிகுப்பம், நஞ்சுண்டகண்டேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 19ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி தீபாரதனை மற்றும் நான்காம் கால யாக வேள்வி நடந்தன. அதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடும், 8:50 மணிக்கு கோபுர கலசத்தின் மீது, சிவாச்சாரியர்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதில், விஷகண்டிகுப்பம் கிராமம் சுற்றியிருக்கும் பெரியகரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

திருக்கோவிலுார்

திருக்கோவிலுார் அடுத்த அருமலை அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் அம்பாள் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி பூஜை, கும்பாபிஷேக ஹோமங்கள் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, அக்னி ஆராதனம், கும்ப பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு மூலவர் சன்னதி கலசத்திற்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாரதி தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஒரு மனிதரின் பிறப்பு நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுவது இயல்பு. ஆனால், அவர் வாழ்ந்த ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
குஜராத் மாநிலம் அம்பாஜியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி – ஏககாவன் சக்தி பீட ஆலயத்தின் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar