ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101து பிறந்தநாள் விழா: கோவையில் கோலாகல கொண்டாட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2026 01:11
கோவை: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101-வது பிறந்தநாள் விழா உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் சாய் சைதன்யம் சத்ய சாய் மந்திரில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் பகவான் சத்திய சாய்பாபாவின் திரு உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.