Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களின் பாவத்தை போக்கும் சோம ... திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள ...
முதல் பக்கம் » துளிகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் இதெல்லாம் பிரதானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் இதெல்லாம் பிரதானம்

பதிவு செய்த நாள்

24 நவ
2026
12:11

தல விருட்சம் - மகிழமரம்

மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்சமாக அமைந்துள்ளது மகிழ மரம் ஆகும்.நீண்டகாலமாக அமைந்துள்ள இந்த இடத்தில் தென்முகக்கடவுளாம் தக்ஷணாமூர்த்தியும் அடுத்து மகிழமரத்து விநாயகர் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். தென்முகக்கடவுள் தக்ஷணாமூர்த்தியும் நமக்கு காட்சி கிடைக்கிறது. அருகிலேயே ஜலகண்டேஸ்வரர் அமர்ந்துள்ளார். இம்மேடையில் கிழக்குத் திசையில் நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களை நாம் பார்க்கலாம். இது மிக அரிய தொரு காட்சியாக உள்ளது.

முருகனே முதற் கடவுள்


கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவர் அருணகிரிநாதரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அருணகிரிநாதரின் பக்தியை இகழ்ந்தார். அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தில் ஒரு துாணில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு கம்பத்திளையனார் (கம்பம் என்றால் துாண், இளையனார் என்றால் முருகன்) என்ற பெயர் பெற்றார்.

மோட்ச தீபம் போடுதல்

கோவிலில் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள், அல்லது ஈமக்கிரியை செய்யும் நாள், அல்லது திதி அன்று அவரவர்களின் பிராத்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயில் மோட்ச தீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.

கரும்புத் தொட்டில் கட்டுதல்

பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும், திருக்கோயிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து, புதிய புடவையினால் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிராத்தனை செலுத்துவது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.

ஆணவம் அடக்கும் பைரவர்:

கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இவரது சிலையை எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, தலையில் பிறைச்சந்திரன் மற்றும் திருவாட்சியுடன் கபால மாலையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

நந்திக்குச் செய்யும் பெருமை

மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களால் ஆன மாலை அணிவித்து பூஜை செய்யப்படும். அந்த நேரத்தில் அண்ணாமலையார் தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக நந்தியின் முன் எழுந்தருளி அவருக்குக் காட்சி தருவார்.

நான்கு முக லிங்கம்

பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்குத் தனித் சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்குச் சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேத்ததை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

செந்துார விநாயகர்

ஆஞ்சநேயருக்குச் செந்துாரம் பூசி அலங்கரிப்பது போல், இத்தலத்திலுள்ள விநாயகருக்குச் செந்துாரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரை வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒரு நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்குச் செந்துாரம் சாத்தும் வைபவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று ... மேலும்
 
temple news
அருணசாலேஸ்வரர் கோவில், பல நுாற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ, ஹெய்சாள மற்றும் விஜய நகர நாய்க்க ... மேலும்
 
temple news
பிரம்ம தீர்த்த குளம்பிரம்ம தீர்த்த குளம், 22,800 சதுர அடி பரப்பளவில், 40 அடி ஆழம் கொண்டவை. கோவிலின் உட்புறம், ... மேலும்
 
temple news
திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை ... மேலும்
 
temple news
1. கிழக்கு இராஜகோபுரம்:கி.பி. 1513- -1514-ல் கிருஷ்ணதேவராயர் தான் தொடங்கினார். 1529 - ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar