ஒச்சாண்டம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாடு: பாப்பாபட்டி சென்ற சின்னபெட்டி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 04:11
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டி கிராமத்தில் இப்பகுதி மக்களின் குலதெய்வக் கோயிலான ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. பூஜை பொருட்கள் அடங்கிய 5 பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் உள்ளது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் 5 பெட்டிகளையும் எடுத்துச்சென்று வழிபாடு நடத்துவர். ஆடிமாதத்தில் நடுஆடி மற்றும் கார்த்திகை மாத வழிபாட்டுக்கு சின்னப்பெட்டியில் உள்ள பூஜை பொருட்கள் மட்டும் எடுத்துச் சென்று வழிபடுவர். இன்று கார்த்திகை வழிபாட்டுக்காக சின்னப்பெட்டி எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் நடைபயணமாக அன்னம்பாரிபட்டி, வடகாட்டுப்பட்டி, மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, இஸ்மாயில் மடம், இளந்தோப்பு வழியாக பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்குச் சென்றனர். கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் பெட்டியை உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வந்தனர்.