விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2026 04:11
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை தீப கிருத்திகை தினத்தை முன்னிட்டு விநாயகர்,வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி, புவனேஸ்வரர் , புவனேஸ்வரி, உற்சவர்,நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசாமி சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. பூஜைகளை ரவி குருக்கள் முன்னின்று செய்தார் . விக்கிரவாண்டி பகுதியில் உள்ள பெண்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.