Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பழைய ... திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் கோவிலிற்கு மாணவர்கள் நடைபயணம் திருவாமாத்துார் அபிராமேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்:  உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

27 நவ
2026
05:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ. 28) கார்த்திகை மகா தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியானதும் சுப்பிரமணிய கோயில் முன்பு முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர், திருப்பரங்குன்றம் பூர்வ குடி மக்கள் கூடி அரோகரா கோஷம் எழுப்பினர்.


ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பா.ஜ. நிர்வாகிகள் வெற்றிவேல் முருகன், ராக்கப்பன், வேல்முருகன், சரவணகுமார், இளையராஜா, ஹிந்து முன்னணி அரசு பாண்டி மற்றும் திருப்பரங்குன்றம் பொதுமக்கள், பூர்வ குடியினர் கோயில் முன்பு அரோகரா கோஷம் போட்டு சஷ்டி கவசம் பாடினர்.‌ பின்பு 108 தேங்காய்கள் உடைத்தனர். முருகப்பெருமானுக்கு தேங்காய் உடைத்தும் பொதுமக்கள், பக்தர்களுக்கு லட்டு, ஜிலேபிகள் வழங்கியும் போலீசாருக்கு அல்வாஜவழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர். ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள் ஒருவரை ஒருவரை கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். 


தீப தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கிறோம் பக்தர்கள் கண்ணீர் மல்க உருக்கம்: நளாயினி, ஆவியூர்:


உச்ச நீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் வந்திருந்தேன்.‌ அன்றைய தினம் போலீசார் எங்களை அடித்து துன்புறுத்தி ரத்த காயம் வரவழைத்தனர். முருகப் பெருமானிடம் கோரிக்கை வைத்து மன வேதனையுடன் சென்றேன். முருகப்பெருமான் சரியான தண்டனை கொடுத்து விட்டார்.‌


சரவணகுமார், திருப்பரங்குன்றம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. மத்திய பாதுகாப்பு படையை அனுப்பி அனுப்பி வைப்பது மகிழ்ச்சி. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிராக கையெழுத்துப் போட்ட அறங்காவலர் குழுவை கலைத்தது எல்லையில்லா மகிழ்ச்சி.‌ தீபத்தூண் அருகே முருக பக்தர்கள் மக்கள் சென்று பார்க்கலாம் என விட்டது நீதிமன்ற உத்தரவிட்டது வாழ்நாள் மகிழ்ச்சி.


பா.ஜ., வெற்றிவேல் முருகன், வேல்முருகன்: திருப்பரங்குன்றம் மக்களின் நெடுநாளைய எதிர்பார்ப்பு, கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மீண்டும் நிறைவேற்றியுள்ளனர். எங்களுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி சொல்ல முடியாத ஆனந்தம். இந்த தீர்ப்பு சுப்பிரமணிய சுவாமிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். எங்கள் மூதாதையர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றியதை பார்த்துள்ளதாக கூறியுள்ளனர்.


சோலை கண்ணன், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்: தீர்ப்பை கேட்டு நெகிழ்ந்து போய் உள்ளோம். நெகிழ்ச்சியான தருணம். இந்த ஆண்டு ஆச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் தீப தூணில் தீபம் ஏற்றப்படும் என திருப்பரங்குன்றம் வந்தோம். ஆனால் அன்று தீபம் ஏற்றாமல் ஏமாற்றி விட்டனர். தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடுத்து நிறுத்திய ஹிந்து விரோத தமிழக அரசுக்கு சரியான பாடம் புகழப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுவை கலைத்ததுடன் கோயில் நிர்வாகத்தை கவனிக்க இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்திருப்பதும், மலை முழுவதையும் சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பில் கொடுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது, தமிழக காவல்துறையை நீதிமன்றம் நம்பவில்லை என்பது தெளிவாகிறது. பக்தர்கள் மலை மேல் சென்று தீப தூணில் தீபத்தை தரிசிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சி. சட்டப்படியான ஆட்சியை நடத்தவில்லை என்றால் முருகப்பெருமானின் சவுக்கடிக்கு ஆளாவீர்கள் என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டாவது தீர்ப்பு உதாரணம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில் மூன்றாம் ஆண்டு வேத ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்து சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசார ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: ‘திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றத்தயார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar