கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவம் விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2026 11:11
புதுச்சேரி: புதுச்சேரி ஐயப்பா சேவா சங்கம் சார்பில், கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவம் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை 9:00 மணிக்கு கலசாபிஷேகம், 9:30 மணிக்கு அஷ்டாபிஷேகம், 10:00 மணிக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை புதுச்சேரி ஐயப்பா சேவா சங்கம் செய்திருந்தனர்.