Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » வேங்கடரமண பாகவதர்
வேங்கடரமண பாகவதர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
03:02

தஞ்சாவூர்  அருகிலுள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் நன்னுசாமி பாகவதர். இவர் திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாளின் பக்தர், இசைமேதையாக ஒரு மகன் தமக்குப் பிறக்க வேண்டும் என்றும், அவனுக்கு வேங்கடவனின் பெயரையே வைப்பதாகவும் வேண்டிக் கொண்டார். 1781 பிப்.18ல் ஆண்குழந்தை பிறந்தது. வேங்கடரமணன் என்று பெயரிட்டனர். உபநயனம் செய்து, தாய்மொழியான  சவுராஷ்டிர மொழியோடு, தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளையும் கற்றுக் கொடுத்தார்.  இசை மேதையான தியாகராஜ சுவாமியின் பெருமையைக் கேள்விப்பட்ட வேங்கடரமணர் அவரிடம்  சங்கீதம் பயில ஆர்வம் கொண்டார். பகலில் தந்தைக்கு பணிவிடை செய்துவிட்டு, மாலையில் 10 கி.மீ. நடந்து திருவையாறு செல்வார். தியாகராஜரின் வீட்டில், மாணவர்கள் கீர்த்தனை பாடுவதை வெளியே நின்றே கேட்டுக் கொண்டிருப்பார். இப்படியே இரு ஆண்டுகள் கழிந்தன.  ஒருநாள் தியாகராஜர். தன் வீட்டின் பின்புறம் கொட்டகை போட வேண்டும் என  சீடர்களிடம் சொல்லிவிட்டு திருவாரூர் போய்  விட்டார். வேங்கடரமணர், சில ஆட்களுடன் வந்து கொட்டகை போட்டு முடித்தார். தியாகராஜரின் மனைவி கமலாம்பாள், அதற்கான பணத்தைக் கொடுத்தார். ஆனால், தன் வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டே கொட்டகை போட்டதாகச் சொல்லி பணம் வாங்க மறுத்து விட்டார்.

விஷயமறிந்த தியாகராஜர் மகிழ்ந்தார். வேங்கடரமணரைச் சீடராக ஏற்று ராமநாமத்தை உபதேசித்தார். தியாகராஜரை குருவாகப் பெற்ற அவர், அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. தியாகராஜரின் நித்ய பூஜைக்கு துளசி, பழம் கொடுத்து உதவினார். ஒருநாள் வேங்கடரமணர் வரும்போது பூஜை முடிந்து விட்டது.  இருந்தாலும் அவர் கொடுத்த துளசியைக் கொண்டு, துளசிதளமுல என்னும் கீர்த்தனையைப் பாடி ராமபிரானை அர்ச்சித்தார். அப்பாடலின் சரணத்தில் தாமரை, புன்னை, மல்லிகை, செண்பகம், குறிஞ்சி  மலர்களின் பெயர்கள் வந்தன. போடப்பட்ட துளசி இலை, தியாகராஜர் என்ன சொன்னாரோ, அந்த மலர்களாகமாறி ராமனின் பாதத்தில் விழுந்தன.  சீடர் மீதுள்ள அன்பால்  தியாகராஜர், சங்கீதம் கற்றுக் கொள்ள விருப்பமா?,  என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தார் வேங்கடரமணர்.  26 ஆண்டுகள் தொடர்ந்து குருவிடம் இசை பயின்றார்.  பருமனும், வலிமையும் கொண்ட வேங்கடரமணரை, அனைவரும் கணபதி என்றே செல்லமாக அழைப்பது வழக்கம்.  ஒருநாள், தியாகராஜர்  சீடர்களிடம், அருகிலுள்ள தோட்டத்திற்குச் செல்லுங்கள். அங்குள்ள தோட்டக்காரன் எனக்கு இலவசமாக பூசணிக்காய்கள் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளான். அதை  எடுத்து வர யாரை  அனுப்பலாம்? என்றார்.

எல்லாரும், கணபதி இருக்க கவலை எதற்கு? என்று தியாகராஜரிடம் தெரிவித்தனர். கணபதியான வேங்கட ரமணரும் புறப்பட்டார்.  தோட்டக்காரன் எட்டுப்பூசணிகளைக் கொடுத்து, முடிந்ததை இப்போது எடுத்துச் செல்லுங் கள்., மீதியை நாளை வந்து எடுத்துப் போங்கள், என்றான். ஆனால், எட்டையும் ஒரு சாக்கில் கட்டி, ஒரே நடையில் கொண்டு வந்து சேர்த்தார் வேங்கடரமணர்.  ஏனப்பா! ஒரே நடையில் கொண்டு வந்தாய்? தூக்குவதற்கு சிரமப்பட்டிருப்பாயே! என்றார் தியாகராஜர்.  குருவே! நான் இப்போதே எடுத்து வராமல் இருந்தால் தோட்டக்காரன் அதை விற்று விட வாய்ப்புண்டு. இதனால் அவன் இலவசமாக தருவதாக சொன்ன வாக்குறுதியை மீறியதாக ஆகி விடும்.  அவ்வாறு செய்தால், அவனை பாவம் அண்டி விடுமே! அவ்வாறு, பாவம் செய்வதிலிருந்து தடுக்கவே, என்  சிரமத்தைப் பாராமல் மொத்தமாக எடுத்து வந்தேன், என்றார். நாம் செய்வது மட்டும்  பாவமல்ல, பிறரைப் பாவம் செய்யத்தூண்டுவதும் மகாபாவமே என்பதை இந்த நிகழ்வின் மூலம் வேங்கடரமணர் உலகுக்கு அறிவித்தார்.

41 வயதாகியும் வேங்கடரமணர் திருமணம் செய்யவில்லை. பெற்றோர் தியாகராஜரிடம் முறையிட்டனர். குருவின் கட்டளைக்குப் பணிந்து, முத்துலட்சுமி என்பவரை மணந்து இரு பிள்ளைகளைப் பெற்றார். வியாபாரத்திற்காக, அய்யம்பேட்டையில் இருந்து வாலாஜாபேட்டை வந்து தங்கினார்.  பிற்காலத்தில் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர் என்ற பெயர் ஏற்பட்டது.  ஏகாதசியன்று தியாகராஜர் வீட்டில் பஜனை நடக்கும். அதன் ஆரம்பத்திலும்,  முடிவிலும் வேங்கடரமணர் பாடுவார். ஒருநாள் அவர்  வரவில்லை. மங்களம் பாட தியாகராஜர் தயாரானார்.  அப்போது, சிறுவன் ஒருவன் கமலாம்பாளிடம், உங்கள் கணவர் மங்களம் பாட தயாராகி விட்டார். ஆனால், வேங்கடரமணர் பாடினால் தான் ராமபிரான் திருப்தி அடைவார்! என்று சொல்லி விட்டு ஓடினான். அவள் தியாகராஜரிடம் இதை தெரிவித்தாள். வேங்கடரமணரும் அதற்குள் வந்து விட்டார். அவரைத்  தியாகராஜர், வாரும் வேங்கடரமண பாகவதரே!, என்று அழைத்து மகிழ்ந்தார்.

வேங்கடரமணரிடம், ராயவேலூர் பல்லவி  எல்லய்யர் கொடுத்த கோதண்டராமர் படம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, தியாகராஜரின் மகள் சீதாலட்சுமி திருமணத்திற்கு புறப்பட்டார். வாலாஜாபேட்டையில் இருந்து திருவையாறுக்கு நடந்தே வந்த அவர், குருவிடம் பரிசாக  வழங்கினார். ஆனந்தக்  கண்ணீருடன் பெற்றுக் கொண்ட தியாகராஜர்,ராமன் எனக்காக இவ்வளவு தூரம் நடந்தே வந்தானோ?,  என்னும் பொருளில்  நன்னுபாலிம்ப நடச்சி  ஒச்சிதிவோ நாப்ராணநாதா, என்று மோகன ராகத்தில்  பாடினார். வேங்கடரமணர் வைத்திருந்த சுவடித்  தொகுப்பில் இருந்தே  தியாகராஜர் எழுதிய பிரகலாத பக்தவிஜயம், நவுகா சரித்திரம், சீதாராம விஜயம் ஆகியன கிடைத்தன.  இசைப்பணியாற்றிய அவர் 1874 டிச.15ல் ராமனின் பாத மலர்களில் ஐக்கியமானார். 

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar