பதிவு செய்த நாள்
19
பிப்
2013
11:02
சித்தாமூர்:கடுக்கலூர் ஆதிகேசவபெருமாள் கோவிலில், ரதஸப்தமி விழா கோலாகலமாக நடந்தது.கடுக்கலூரில், அம்புஜவல்லி நாயகி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரதஸப்தமி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ரதஸப்தமி விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு, ஆதிகேசவப் பெருமாள் ‹ர்ய பிரபை வாகனத்திலும், தாயார் ஹம்ஸ வாஹனத்திலும், வீதியுலா வந்தனர். காலை 8:30 மணிக்கு கருடசேவை, காலை 9:00 மணிக்கு சேஷவாகனம், 10:30 மணிக்கு ஹனுமந்த வாகனம், 12:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பகல் 1:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, மாலை 5:00 மணிக்கு யானை வாகனம், 6:30 மணிக்கு குதிரை வாகனம், இரவு 8:00 மணிக்கு சந்திரபிரபை உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.