நகரி: நகரி அடுத்துள்ள, மாங்காடு கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட அபய ஆஞ்சநேய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பழமை வாய்ந்த ஆஞ்சநேய சுவாமி விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், மாங்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, ஏராளமானோர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப் பட்டது. சாந்தி பூஜை நகரி டவுனில் பேரி வீதியில் அமைந்துள்ள வீரபத்ர சுவாமி கோவிலில், சாந்தி பவுஷ்டி மகா பூஜை நடைபெற்றது. வீரபத்ர சுவாமி உற்சவமும் நடந்தது.