Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாராயணி பீடத்தில்ஸ்ரீ சரஸ்வதி யாகம் நாளை மஹா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2013
11:02

ப.வேலூர்: காந்திநகரில் உள்ள விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (பிப்., 20) கோலாகலமாக நடக்கிறது. ப.வேலூர், சுல்தான்பேட்டை காந்திநகரில், விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன் மற்றும் மதுரை வீரன் ஸ்வாமிக்கு, மிகுந்த பொருட்செலவில், புதிதாக கோவில் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நாளை (பிப்., 20) கும்பாபிஷேகம் செய்ய, விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, இன்று (பிப்., 19) அதிகாலை, 4 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. காலை, 8.30 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்துக்கொண்டு கோவில் வந்தடைகிறது. மாலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், வாஸ்துசாந்தி, முதற்கால யாகசாலை பிரவேசம், இரவு, 9.30 மணிக்கு கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.நாளை (பிப்., 20) அதிகாலை, 4 மணிக்கு, இரண்டாம்கால யாகவேள்வி, நாடி சந்தானம், மூலமந்திர ஹோமங்கள் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 6 மணிக்கு விநாயகர், தன்னாசியப்பன், கைலங்கிரி அம்மன், மதுரை வீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல், சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar