பதிவு செய்த நாள்
19
பிப்
2013
11:02
வேலூர்: வேலூர் ஸ்ரீ புரம் தங்க கோவில், நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், நாராயணி வித்யாலாயா பள்ளி, பசுமை திட்டம், திடக்கழிவு மேலாண்மை போன்ற பல திட்டங்கள் நடந்து வருகிறது.தற்போது, எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு ஞானமும், பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களும் பெற்று வெற்றி பெற நாராயணி பீடத்தில் சிறப்பு பூஜையாக ஸ்ரீ மேதா சூக்த யாகம் எனப்படும் ஸ்ரீ சரஸ்வதி யாகம் நடந்தது. சக்தி அம்மா யாகத்தை நடத்தினார். தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் நடராஜ், வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம், எம்.எல்.ஏ., கலையரசன், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் அன்பழகன், தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி அறக்கட்டளை அறங்காவலர் சவுந்தரராஜன், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட, 10 ஆயிரம் பேனாக்களை மாணவ, மாணவியர்களுக்கு சக்தி அம்மா வழங்கினார்.