பதிவு செய்த நாள்
20
பிப்
2013
11:02
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் மகால், பார்வையாளர்களுக்காக, மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரதவீதியில், மன்னர் திருமலை நாயக்கர் மகால் உள்ளது. மதுரை மகாலில் உள்ளது போல், பெரிய தூண்கள், ஓவியங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. இதுகுறித்து, "தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தொல்லியல் துறை சார்பில், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது; இரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டு, திருமலை நாயக்கர் கால புகைப்பட கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மகாலின் முன் பகுதியில் சேதமடைந்த மரத்தூண்கள் செப்பனிடும் பணி நடந்தது. இதனால், மகால் மீண்டும் மூடப்பட்டது. பணிகள் முடிந்து, மீண்டும் மகால் திறக்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 5 மணி வரை, பார்வையாளர்கள் மகாலை பார்க்கலாம்.