பதிவு செய்த நாள்
22
பிப்
2013
11:02
மேலூர்: மேலூர் அருகே அரிட்டாப்பட்டியில், தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய இரு கல்வெட்டு தூண்களை, கண்மாயில் கிராமத்தினர் கண்டுபிடித்தனர். அரிட்டாபட்டி மலையில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி, வட்டெழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுக்கள், சமணர் படுகைகள், குகை கோயில்கள், மகாவீரரின் சிற்பங்கள் உள்ளன.ஊரை சுற்றி கலிஞ்சமலை, நாட்டார்மலை, வயிற்றுபிள்ளான்மலை, ராமன் ஆய்வு(தற்போது ராமாயி)மலை, அகப்பட்டான்(ஆப்டான்)மலை, கழுகுமலை, தேன்கூட்டு மலை ஆகிய மலைகள் உள்ளன. கிரானைட் கற்களாலான மலையின் சுற்றளவு 3 கி.மீ., பரப்பு கொண்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஊரை சுற்றுலாத்தலமாக மாற்ற அதிகாரிகள் அவ்வவ்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். கிராமத்தினரை அழைத்தும் கூட்டங்களை நடத்துகின்றனர். தொல்லியல் துறையினர், இப்பகுதியில் மேலும் பல கல்வெட்டுக்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.அதன்படி அணை கொண்ட கண்மாயை (தற்போது ஆனைகுண்டான் கண்மாய்) கிராமத்தினர் நேற்று தோண்டி போது, இரு தூண்கள் வடிவிலான கல்வெட்டுகள் எடுக்கப்பட்டன. அதில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்தன.ஏழு மலை பாதுகாப்பு சங்க செயலர் ரவிச்சந்திரன் கூறியதாவது: மலையில் எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள், சுனைகள், சிற்பங்கள் உள்ளன. கண்மாயில் எடுத்த இருகல்வெட்டுகளிலும் வட்ட வடிவ எழுத்துக்கள் காணப்பட்டன, என்றார்.