Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 10ம் நூற்றாண்டு பெருமாள் கோயில் ... சிவலிங்கம் சுவாமி மீது சூரிய ஒளி: ஆண்டுக்கு 3 நாள் விழும் அதிசயம்! சிவலிங்கம் சுவாமி மீது சூரிய ஒளி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரோவில் உதய தின விழா: போன் பயர் ஏற்றி கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

01 மார்
2013
10:03

புதுச்சேரி: சர்வதேச நகரமான ஆரோவில் உதய நாளையொட்டி, அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேற்று "போன் பயர் ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.மனித குல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்ட ஆரோவில் சர்வதேச நகரம், புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.ஆரோவில் சர்வதேச நகரை வடிவமைக்கும் பணியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். உலகில் மனித இன ஒற்றுமைக்கு அடையாளச் சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன்முதலாக தத்துவஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது.ஆரோவில் குறித்த பொது அறிக்கை, 1965ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. 1966ம் ஆண்டில், ஆரோவில் குறித்த திட்டம், யுனெஸ்கோ பொது சபையில், இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால், 1968ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரோவில்லின் 45வது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று காலை 5 மணிக்கு கூடினர்.அங்கு, காலை 5.15 மணிக்கு "போன் பயர் ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானம், 6.15 மணிக்கு முடிவடைந்தது. கூட்டு தியானத்தின் போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது."போன் பயர் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
எப்போதுமே விநாயகர் சதுர்த்தி தமிழகம் எங்கும் களைகட்டும். இந்த வருடமும் அப்படித்தான். இந்த வருடம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவராஹஸ்வாமி ஜெயந்தி, ஆதி வராஹர்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயில் தெப்பம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கோயில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ரூ.30 முதல் ரூ.500 வரை பல்வேறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar