குற்றாலம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5 லட்சத்து 84 ஆயிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2013 11:03
குற்றாலம் : குற்றாலநாதர் கோயில் உண்டியல் மூலம் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் காணிக்கை கிடைத்தது. சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் குற்றாலம் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மாள் கோயிலுக்கு பக்தர்களாகல் செலுத்தப்படும் காணிக்கைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகின்றன. இதன்படி நேற்று கோயில் உண்டியல் எண்ணிக்கை நெல்லை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் பழனிகுமார், ஆய்வாளர் ஏமையா, கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் எண்ணப்பட்டது. உண்டியல் மூலம் 5லட்சத்து 84ஆயிரத்து 98 ரூபாய் உண்டியல் மூலம் காணிக்கை கிடைத்தது.