நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவில் 2000-ம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. கடல் காற்றின் உப்புத்தன்மையால் சிலை சேதம் அடைவதை தவிர்க்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்புப்பணிகள் நடத்தப்பட்டு ரசாயணகலவை பூசப்படும். கடந்த 2008-ம் ஆண்டு இந்த பணி நடைபெற்றது. அடுத்து 2011-ம் ஆண்டு இது நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பணிகள் நடைபெறாததால சிலை சேதம் அடைய தொடங்கியது. இதை தொடர்ந்து தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து 87 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இதற்கான பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக கம்பியால் சாரம் கட்டும் பணி நடைபெறுகிறது. கடலில் காற்று வேகமாக உள்ளதால் பணி மெதுவாக நடைபெறும். சாரம் கட்டும் பணி நிறைவு பெற்றதும் ரசாயணகலவை பூசப்படும். பணிகள் தொடங்கியதை தொடர்ந்து நான்கு மாதங்கள் திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.