திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் சாலைக்குமாரசாமி கோயிலில் சண்முக அர்ச்சனையை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. கோயிலில் மாசி மாத சண்முக அர்ச்சனை நேற்று நடந்தது. காலையில் 1008 சங்குகள் வைத்து சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடந்தது. சிறப்பு கும்ப ஹோம பூஜை, வேத பாராயணம் நடந்தது. இரவு சண்முகா அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சண்முக அர்ச்சனை வழிபாட்டுக்குழுவினர், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.